நெல்லை: கிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ பேட்டரிகளை திருடி சென்ற நபர் கைது

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் (30) என்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். 18.10.2021 அன்று கணேசன் வீட்டிற்கு முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது, நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் கணேசனின் ஆட்டோ பேட்டரியை திருடியதை பார்த்து சத்தம் போட்டவுடன் தப்பிச் சென்றுவிட்டார். பின் ஆட்டோவை வந்து பார்க்கும் பொழுது அவருடைய ஆட்டோவிலிருந்து பேட்டரியையும் மற்றும் அருகில் இருந்த ஆட்டோவில் உள்ள பேட்டரிகள் மொத்தம் 3 ஆட்டோ பேட்டரிகளை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து கணேசன் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு விசாரணை மேற்கொண்டு, ஆட்டோ பேட்டரிகளை திருடிச்சென்ற மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் குற்றவாளியிடம் இருந்து 3 ஆட்டோ பேட்டரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu