நெல்லை அருகே ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

நெல்லை அருகே ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

பைல் படம்.

தோணிதுறையில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

நெல்லையை அடுத்த தோணித்துறை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்சாபுரம் நொச்சிகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார்(36) என்பவர் அவருக்கு சொந்தமான ஆட்டோவில் தோணித்துறை பஸ் ஸ்டாப்பில் வைத்து ஆட்களை ஏற்றும் போது சீவலப்பேரி சேர்ந்த சண்முகதுரை(21), என்பவர் அவரது ஆட்டோவுடன் சென்று செல்வகுமார் ஆட்டோவிற்கு முன்நிறுத்தி செல்வகுமாரை பார்த்து நீ எப்படி ஆட்களை ஏற்றலாம் என்று அவதூறாக பேசி அருகில் கிடந்த மண் வெட்டியால் தாக்கும் போது செல்வகுமார் தடுத்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் நீ எப்படி வெளியூர் ஸ்டாண்டில் இருந்து கொண்டு நான் எடுக்கும் ரெகுலர் ஆட்களை எப்படி ஏற்றலாம் என சொல்லி அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து செல்வகுமார் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் விசாரணை மேற்கொண்டு செல்வகுமாரை தாக்கிய சண்முகதுரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Tags

Next Story