டோல்கேட்டில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி ஒருவர் பலி

டோல்கேட்டில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி ஒருவர் பலி
X

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட்டில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்தில் ஊழியர் பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நான்கு வழி சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டோல்கேட் அமைந்துள்ளது. அங்கு நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியானது நாங்குநேரி டோல்கேட் அருகே வரும் போது அங்கு இருந்த சரியான பாதையில் இருந்த ஆறு லைன்களில் செல்லாமல் அதனை தாண்டி எதிர் திசையில் இருந்து வாகனங்கள் வரும் 2 வது லைனுக்கு அதிவேகமாக கண்டெய்னர் லாரி உள்ளே புகுந்தது. அப்போது அந்த லைனில் உள்ள டோல் பூத்தின் கண்ணாடியை கயத்தாறு சேர்ந்த மாரியப்பன் என்பவர் துடைத்துக் கொண்டிருந்தார்.எதிர் திசையில் இருந்து வண்டி வருவதை அறிவதற்கு முன்பே கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.

இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. மேலும் அந்த கண்டெய்னர் லாரி டோல் தடுப்பை உடைத்துக் கொண்டு அங்கே நிறுத்தாமல் வேகமாக டோல்கேட்டை கடந்து சென்றது. இதனை அறிந்த டோல்கேட் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் விரட்டிச் சென்று அந்த லாரியை சுமார் 5 கிலோ மீட்டா் தொலைவில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்தனர். பின்பு கண்டெய்னர் லாரி ஓட்டுனரை டோல்கேட் ஊழியர்கள் சராமாரியாக தாக்க தொடங்கினர்.

பின்பு அங்கு வந்த போலீசார் அவர்களிடமிருந்து தூத்துக்குடியை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கார்மேகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த நாங்குநேரி போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி சிசிடிவி மூலம் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!