நெல்லை கொங்கந்தான்பாறையில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
கொங்கந்தான்பாறை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கொங்கந்தான்பாறை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கொங்கந்தான் பாறை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கிராமசபை கூட்டத்தில் கிராமத்தின் வரவு,செலவு குறித்த அறிக்கைகள் வைக்கப்பட்டது. அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், பொதுமக்கள் எளிமையான முறையில் எவ்வாறு பெற்றுக்கொள்வது குறித்து எடுத்துரைத்தார்கள்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இன்று மே மாதம் 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தில் கிராமத்தின் வரவு,செலவு குறித்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. ஏனென்றால் கிராமத்தின் வரவு,செலவு கிராம ஊராட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி ஒளிவுமறைவின்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே. கிராமப்பகுதி மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், போன்றவை அனைவருக்கும் தடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியபட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும். குடிநீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆற்று நீரில் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் களிவுகளை போடக்கூடாது. நமது மாவட்டத்தின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றுநீரினை சுத்தமாக வைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும். ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் தடை செய்வது குறித்தும், கழிவுநீர் ஆற்றில் கலந்திடா வண்ணம் நடவடிக்கை எடுப்பது குறித்தும் வாகனங்களை ஆற்றில் இறக்கி கழுவுவதை தடை செய்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மஞ்சள்பை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தங்கப்பாண்டியன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அனிதா, வாட்டாச்சியர் பாளையங்கோட்டை ஆவுடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி, பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.முருகப்பெருமாள்,.மலர்மாரி, ஊராட்சிமன்ற தலைவர் கலையரசி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu