நெல்லை காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்று பயணம்
பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி மாணவர்களின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஒரு நாள் சுற்று பயண நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளியில் 25 மாணவ, மாணவியர்களை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஒரு நாள் சுற்று பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தில் பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி 25 மாணவ- மாணவியர்களை, அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமையம் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து, தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை என்ற களப்பயண ஒரு நாள் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது: கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ- மாணவியர்களின் மழை பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமையம் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து, தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை என்ற களப்பயணம், இந்தியாவின் பறவை மனிதர் முனைவர் சாலிம் அலிமின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 12.11.2021 அன்று களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் ஒரு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக நெல்லை நீர்வளம் என்ற இயக்கம் எற்கனவே மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நெல்லை நீர்வள என்ற இணையதளத்தில் அனைத்து தன்னார்வலர்கள் பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து 4 மாதங்கள் இப்பணியில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இதில் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களுக்கு நீர்நிலைகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு பணியில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று முன்னோட்டமாக பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமையம் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து, ஒரு நாள் சுற்று பயணம் மேற்கொள்ள எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று சேர்வலாறு, காரையாறு அனைகளை பார்வையிட்டனர். இது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களுக்கு நீர்நிலைகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வனச்சரக அலுவலர் சரவணகுமார், அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமையம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெற்றிசெல்வி, பிளாரன்ஸ் சுவைசன் காது கேளாததோர் பள்ளி முதல்வர் ஜான்சன், மாவட்ட மாற்று திறனாளிகள் (முடநீக்கியல்) அலுவலர் பிரபாகரன், அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமைய ஆய்வாளர்கள் மரிய அந்தோனி, தளவாய்பாண்டி, இராமநாராயணன், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu