களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது

களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது
X

களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் வேட்டை நாய்களை கொண்டு கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது, ஒருவர் தப்பியோட்டம். இரண்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல், 80 கிலோ கடமான் இறைச்சி பறிமுதல்.

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட புதுக்குடி மேலமுருகன் கோவில் வனப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த ஆறுமுகம் ( வயது 40 ), குமார் ( 42 ), மேலப்புதுக்குடியை சேர்ந்த ஸ்டாலின் ( 42 ), வெள்ளாங்குழியை சேர்ந்த முருகன் ( 50 ) ஆகியோர் வேட்டை நாய்கள் மூலம் கடமானை வேட்டையாடி பிடித்து கொன்று இறைச்சிக்காக வெட்டிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து ஆறுமுகம், குமார், ஸ்டாலின் ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். முருகன் தப்பி ஓடி விட்டார். கைதானவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, 2 மோட்டார் சைக்கிள்கள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆறுமுகம் உள்பட 3 பேரையும் வனத்துறையினர் சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் தலைமறைவாக உள்ள முருகனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரத்தில் இதே போன்று கடமான் வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இதேபோன்று சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதில் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினால் மட்டுமே இது குறித்த முழு தகவல்கள் வெளிவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil