நெல்லை-மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 169 வது ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 169 வது ஆம்புலன்ஸ் சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில்:
தமிழகத்தை வளமான மாநிலமாக தமிழக முதல்வர் மாற்றி வருகிறார். சென்னை ஐஐடியில் மர்மமான முறையில் உன்னிகிருஷ்ணன் என்கிற மாணவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சாதிய பாகுபாடு காரணமாக தான் நடத்தப்பட்டதாக பெற்றோரிடம் கூறி இருக்கிறார். அதன்பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அந்த வழக்கு சிபிஐ யிடம் ஒப்படைக்க பட்டது. ஐஐடியில் நடக்கும் சாதிய பாகுபாடு மற்றும் மத பாகுபாடுகளை தமிழக அரசு தலையிட்டு முதல்வர் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உரியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வருகின்ற ஜூலை ௬-ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
கூடங்குளத்தில் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைக்கான கட்டுமான தொடக்கப் பணிகள் நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாவது அணு உலை இதுவரை 100 தடவைகளுக்கு மேல் செயல் இழந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 3 மற்றும் 4 வது அணு உலைக்கான பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த அணுக்கழிவுகளை எங்கே வைக்க போகிறார்கள் என்று மிக முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கிறது. அதற்கு அணுசக்தி நிறுவனம் இதுவரை சரியான பதில் அளிக்காத சூழ்நிலையில் அருகில் இருக்கும் இலங்கையில் சீனா மிகப் பெரிய ராணுவ தளத்தை அமைக்க கூடிய நிலையில் இங்கிருக்கும் கூடங்குளம் அணு உலையை இங்கு நிறுவுவது, அதனை விரிவாக்கம் செய்வது, கூடங்குளத்தில் அணுஉலை பூங்கா அமைப்பது என்பது தமிழ்நாட்டில் நலனுக்கு எதிரானது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிக மோசமானது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைக்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது எங்கள் கட்சியின் கோரிக்கை.
பாரதிய ஜனதா கட்சியும், அதனை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் அவர்கள் சொல்வது தான் கருத்து சுதந்திரம் மற்றவர்கள் சொல்வதை சகிக்க கூடிய மனப்பான்மை இல்லாதவர்களாக ஆட்சி அமைத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒளி வரைவு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து கலை உலகில் இருக்கக் கூடியவர்களை முடக்குவதாகற்காக மத்திய அரசு ஒளி வரைவு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருகிறது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu