கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ கோரிக்கை

கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ கோரிக்கை
X

எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக்

கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுபவர்களின் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை, தமிழக அரசே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ள நிலையில், பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படாமல் உள்ளனர்.

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.நேற்றைய முன்தினம் சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலைச் சேர்ந்த, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர், முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாத நிலையில், அதனை விண்ணப்பிக்க மதுரை மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்து, காப்பீடு திட்ட அதிகாரிகளை எச்சரித்ததாக செய்திகள் வெளியாயின.]

இதுபோன்ற ஏராளமான பொதுமக்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் தங்களை இணைப்பதற்காக காத்திருக்கின்றனர்.ஆகவே, தற்போதைய கொரோனா பரவல் சூழலில் மக்களை, நோயாளிகளை அலைக்கழிக்காமல் காப்பீடு திட்டத்தில் இணைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதை மாற்றி, விண்ணப்பித்தலை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இ-சேவை மையங்கள் மூலமாகவோ, அல்லது கொரோனா சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இதற்காக அதிகாரியைக் கொண்டு சிறப்பு கவுண்டரை அமைத்தோ அல்லது வேறு சில எளிய நடவடிக்கைகள் மூலமாகவோ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!