இன்று முதல் 6 நாட்கள் பாபநாசம், காரையார் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மகாளய அமாவாசை நாளான நாளை (6ம் தேதி) பாபநாசத்திற்கு தர்ப்பணம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவர்.

மகாளய அமாவாசை நாளான நாளை (6ம் தேதி) பாபநாசத்திற்கு தர்ப்பணம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவர். கொரோனா தடை உத்தரவு அமலில் இருப்பதால், அன்றைய தினம் பாபநாசத்தில் பக்தர்கள் தர்ப்பணம் செய்யவும், சுற்றுலாப் பயணிகள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மகாளய அமாவாசை தடை இன்று (5ம் தேதி) முதல் வரும் 7 ம் தேதி வரை 3 நாட்களும், பின் அரசு வழக்கம் போல் அறிவித்துள்ள வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) வரை சேர்த்து ஆக மொத்தம் 6 நாட்கள் பாபநாசம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project