/* */

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் கோவில்கள் மூடல்: பக்தர்கள் வேதனை

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோவில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் தொடர்ந்து ஆறு நாட்கள் மூடப்பட்டன.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் கோவில்கள் மூடல்: பக்தர்கள் வேதனை
X

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் பாபநாசர் சுவாமி திருக்கோவில் மற்றும் காரையார், சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்களில் மகாளய அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோயில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் உள்ளுர் பக்தர்கள் வருகை புரிவர்.

ஆனால் தற்பொழுது கொரொனா நோய் தொற்று காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் தற்போது மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் கோவில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்கனவே கோவில்கள் அடைப்பு நடைமுறையில் உள்ளதால் தொடர்ந்து இன்று முதல் வருகின்ற 10ம் தேதி வரை ஆறு நாட்கள் கோவில்கள் அடைக்கப்படும் என்றும் இந்த நாட்களில் தாமிரபரணி ஆற்றில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையறியாமல் இன்று வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொடர்ந்து நோய்த் தொற்றை காரணம் காட்டி கோவில்கள் மூடப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Updated On: 5 Oct 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!