மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு
X

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பெருங்கால் மதகை கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பெருங்கால் மதகை கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் ஆணையின்படி, அரசாணை (வாலாயம்) எண்.136 நீர்வளத்(என்2)துறை நாள் 29.04.2022-ன் படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயப் பெருமக்களுக்கு தற்போது மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கருத்திற்கொண்டு மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்காக 01.05.2022 முதல் 28.08.2022 வரை (120 நாட்களுக்கு) தண்ணீர் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த கீழ்கண்ட கிராமங்களைச் சார்ந்த 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

பயன்பெறும் கிராமங்கள் :

1. ஜமீன் சிங்கம்பட்டி

2. அயன் சிங்கம்பட்டி

3. வைராவிக்குளம்

4.: தெற்கு பாப்பான்குளம்

5. தெற்கு கல்லிடைகுறிச்சி

விவசாயப் பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பணியில் நீர்வளத்துறைக்கு பயன்படுத்தவும் நீர்விநியோகப் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது