நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பக புதிய இயக்குநராக செண்பகபிரியா நியமனம்
புதிய அதிகாரி செண்பகப்பிரியா
நெல்லை மாவட்டம், முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநராக செண்பகபிரியா நியமிக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.
முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநராக மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட வன அலுவலர் கவுதமன் முண்டந்துறை வன உயிரின பாதுகாப்பக துணை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu