மரம் விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

மரம் விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
X

பத்தமடையில் மரம் விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அஹமது நவவி கோரிக்கை விடுத்தார்.

பத்தமடையில் மரம் விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் கோரிக்கை.

நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்ய மரத்தை அகற்றும் போது மரம் விழுந்து பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் பதிலாக, ரூ 50 லட்சம் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என SDPI கட்சி மாநில பொது செயலாளர் கோரிக்கை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பத்தமடை பகுதியில் திருசெந்தூர்- அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணியின் போது ஜேசிபி எந்திரத்தை கொண்டு நேற்று ஆல மரத்தை அகற்றும் போது மரம் அந்தவழியாக சென்ற ஆட்டோவில் விழுந்நது. அதனால் ஆட்டோ டிரைவர் காதர் மற்றும் பயணம் செய்த ரஹ்மத் நிஷா என்ற பெண் உட்பட இருவர் பலியாகினர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பலியான இரண்டு பேருக்கும் தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அகமது நவவி கூறுகையில்:- சாலை பணியின் போது ஆட்டோவில் சென்ற இருவர் பலியான விவகாரத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் . இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் சாலை விரிவாக்கப் பணியில் ஒப்பந்ததாரர் மீது பதியப்பட்டுள்ள விபத்து வழக்கு கொலைக் குற்றவாளியாகக் கருதி அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. மேலும் அந்த ஒப்பந்ததாரிடமிருந்து ரோடு விரிவாக்க பணியினை அகற்றி விட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி செலவை அரசே ஏற்று கொள்ள வேண்டும். மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நிச்சயம் Sdpi கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என SDPI கட்சி மாநில பொது செயலாளர் அஹமது நவவி கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அம்பை ஜலில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மது அலி, தொகுதி செயற்குழு உறுப்பினர் கல்லிடை ராஜா, பத்தமடை நகர தலைவர் சரிப், அம்பை தொகுதி செயற்குழு உறுப்பினர் அசன் காதர், வீரை நகர தலைவர் அசனார், செயலாளர் பசீர், பத்தமடை நகர எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் மற்றும் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொண்டனர். விபத்தில் இறந்த காதர், ரஹ்மத் நிஷா ஆகியோர் உடலை இன்று மதியம் 3 மணி அளவில் நல்லடக்கம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!