அம்பாசமுத்திரத்தில் புதிய மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது: இந்து முன்னணியினர் எதிர்ப்பு

அம்பாசமுத்திரத்தில் புதிய மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது: இந்து முன்னணியினர் எதிர்ப்பு
X
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் அரசுமதுபான கடை திறந்தால் இடையூறு ஏற்படும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தாசில்தாரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே புதிதாக அரசு மதுபான கடை திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி நகர தலைவர் ஸ்ரீதர் சரவணன் தலைமையில் அம்பாசமுத்திரம் தாசில்தார் வெற்றிச்செல்வியிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், புதிதாக மதுபான கடை திறக்க உள்ள இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். மேலும் அம்மையப்பர் கோவில் 100 மீட்டர் பகுதிக்குள் உள்ளது. அருகில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியவை அருகில் உள்ளது. எனவே இப்பகுதிக்கு அதிகமாக வந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது . எனவே, இப்பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவு, புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags

Next Story
ai in future agriculture