நெல்லை: கிராமங்களில் நள்ளிரவில் சைக்கிளில் ராேந்து சென்று எஸ்பி ஆய்வு
கோபாலசமுத்திரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சைக்கிளில் ரோந்து பணியை மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் சர்ச்சையை உருவாக்கிய கோபாலசமுத்திரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சைக்கிளில் ரோந்து பணியை மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த இரு கொலை சம்பவங்களால் அந்த பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைதி கூட்டங்கள் நடத்தப்பட்டு இரு கிராம மக்களும் தற்போது சுமுக சூழ்நிலையில் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் நேற்று நள்ளிரவில் சைக்கிளில் கோபாலசமுத்திரம் கிராமத்தில் வீதி வீதியாக ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணிக்காக அங்கு நியமிக்கப்பட்டிருந்த காவலர்கள் மாவட்ட எஸ்பி சைக்கிளில் வலம் வருவதைக் கண்டு பரபரப்பு அடைந்தனர்.
அந்த நள்ளிரவு நேரத்திலும் ஒரு மூதாட்டி கொடுத்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டியுடன் ஒரு காவலரை அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து அருகில் உள்ள கிராமங்களுக்கும் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சைக்கிளிலிருந்து பயணம் மேற்கொண்டார். மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சைக்கிளில் ரோந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu