தேசிய கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பாராட்டு

தேசிய  கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி பாராட்டு
X
தேசிய அளவில் 2ஆம் இடத்தை பிடித்து, பெருமை சேர்த்த மாணவர்களை நேரில் வரவழைத்து மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பாராட்டினார்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியரை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டி ஊக்குவித்தார்.

சென்னையில் கடந்த ஜூலை 10ம் தேதி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், நெல்லை மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அகாடமி ஆப் டீம் 24 கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் தங்களது திறமையை வெளிபடுத்தி, தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார் .

மேலும், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார். ‌ மேலும் குழந்தைகளுக்கு நன்கு பயிற்சி அளித்து தேசிய அளவில் இரண்டாம் பிடிக்க பயிற்சி அளித்த விஷ்ணுவர்தன் ஆசிரியரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

Tags

Next Story
why is ai important to the future