நெல்லையில் முழு காெள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லையில் முழு காெள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
X
தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான மணிமுத்தாறு அணை கொள்ளளவை எட்டியது. அணையில் தண்ணீர் திறப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் ஒன்று மணிமுத்தாறு அணை. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 117.60 அடியாக உள்ளது. இந்த அணையின் நீரானது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாகவும், பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பி வந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்து சுமார் 762 கன அடியாகவும், அணையிலிருந்து 1100 கனஅடியாகவும் வெளியேற்றப்படுகிறது.

மேலும் மழை பெய்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். பாசனத்திற்கும், பொது மக்களுக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் மணிமுத்தாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai products for business