2 நாட்களாக குடிநீர் இன்றி பரிதவிக்கும் மணிமுத்தாறு பகுதியினர்

2 நாட்களாக குடிநீர் இன்றி பரிதவிக்கும் மணிமுத்தாறு பகுதியினர்
X
மணிமுத்தாறு பகுதியில் 2 ஆயிரம் போலீசார், மீன்வளத்துறையினர், வனத்துறையினர் உள்பட ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 2 ஆயிரம் போலீசார், மீன்வளத்துறையினர், வனத்துறையினர் உள்பட ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!