நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது

நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது
X
கல்லிடைக்குறிச்சியில் நவராத்திரி கொலு வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லிடைகுறிச்சி, மடவளாகம் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து (50) என்பவர் வீட்டில் 11.10.2021 அன்று நவராத்திரி கொலு பூஜை நடைபெற்றது.

மறுநாள் காலை பார்க்கும் போது பீரோவில் உள்ள 240 கிராம் தங்க நகைகளை காணவில்லை. நவராத்திரி கொலு காரணமாக திறந்து இருந்த வீட்டுக்குள் யாரோ மறைந்திருந்து இசக்கிமுத்து மற்றும் குடும்பத்தினர் தூங்கிய பின்னர் வீட்டுக்குள் மறைந்து இருந்தவர் பீரோவை திறந்து தங்க நகைகளை திருடி பின் வாசலை திறந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கல்லிடைகுறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி விசாரணை மேற்கொண்டதில், இசக்கிமுத்து வீட்டிலிருந்து நகைகளை திருடியது ஆலங்குளம், கிடாரக்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேல்சாமி(23) என்பது தெரியவந்தது.

மேற்படி காவல் ஆய்வாளர் வேல்சாமியை 04.12.2021 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் திருடிச் சென்ற 240 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!