சேரன்மகாதேவியில் உழவர் நலத்துறை, வேளாண்மை முகமையின் கிஸான் கோஸ்திஸ் மேளா
காருக்குறிச்சி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் கிஸான் கோஸ்திஸ் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் கிஸான் கோஸ்திஸ் மேளா.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் வடக்கு காருக்குறிச்சி கிராமத்தில் கிஸான் கோஸ்திஸ் மேளா நடத்தப்பட்டது. சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ் குமார் வரவேற்று பேசினார். இம்மேளாவிற்கு சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூங்கோதை குமார், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஆனந்த லட்சுமி, வடக்கு காருகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் தலைமையேற்று பேசி நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்த துண்டு பிரச்சுரத்தை விவசாயிகளுக்கு வழங்கினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் டேவிட் டென்னிசன் அட்மா திட்டம், உயிர் உரங்களின் பயன்கள், மண் பரிசோதனைப்படி உரமிடல் குறித்தும், வேளாண்மை துணை இயக்குநர் சுந்தர் டேனியல் பாலஸ் மத்திய அரசு திட்டங்கள் குறித்தும், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகச்சாமி நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன், தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் நாகூர் மீரான், உதவி பொறியாளர் ஜெயகணேசன், மீன்வள மேற்பார்வையாளர் முரசொலி, பட்டு வளர்ச்சிதுறை உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் நன்றி கூறினார். இம்மேளாவிற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்க சரவணன், உதவி விதை அலுவலர் சுரேஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன், சேக் முகம்மது அலி, தமிழரசன், சக்தி, கலா, கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர். மேளாவின் போது நுண்ணீர் பாசனம், பயிர் காப்பீடு திட்டங்கள் குறித்து பேரணி செல்லப்பட்டது. கருத்துக்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu