கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் குண்டர் சட்டத்தில் கைது

கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் குண்டர் சட்டத்தில் கைது
X
கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

நெல்லை கல்லிடைக்குறிச்சி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் கொலை வழக்கு குற்றவாளிகளான திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கீழஏர்மாள்புரம் தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி(64) மற்றும் அவரது மகன் சட்டநாதன் (32) ஆகிய இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரிக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai ethics in healthcare