தாெடர் மழை எதிராெலி: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தாெடர் மழை எதிராெலி: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு
X
நெல்லை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் பெய்த தொடர் மழையால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

நெல்லை மாவட்டத்தில் முக்கிய அணைகளாக விளங்குவது பாபநாசம் காரையார் அணை, சேர்வலாறு அணை மற்றும் மணிமுத்தாறு அணை ஆகிய அணைகளாகும். இந்த அணைகளில் உள்ள நீர் சுமார் மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையை நம்பி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது. இன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வரும் காரணமாக உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணையில் ஒரே நாளில் 14 அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை நீர்வரத்து 1500 கன அடியாக இருந்த நிலையில் மாலை 17000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணை பகுதிகளில் 235 மிமீ மழை பதிவாகி உள்ளது.

இதே போல் 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் ஒரே நாளில் 18 அடி உயர்ந்தது. 143.86 கன அடியாக உள்ளது. மேலும் கொள்ளளவு அதிகம் கொண்ட 118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணையில் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 70 அடியாக உள்ளது. இங்கு நீர்வரத்து சுமார் 3830 க. அடியாக உள்ளது. இதே மழை தொடரும் பட்சத்தில் நாளைக்குள் பாபநாசம் காரையாறு அணை மற்றும் சேர்வலாறு அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ai based agriculture in india