அயன் சிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

அயன் சிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
X

அயன் சிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு யூனியன் சேர்மன் வழங்கி தொடங்கி வைத்தார்.

அயன் சிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதியில் பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு யூனியன் சேர்மன் வழங்கினார்.

அயன் சிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை பொதுமக்களுக்கு யூனியன் சேர்மன் வழங்கி தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அம்பாசமுத்திரம் யூனியன் சேர்மன் பரணி சேகர் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

பொங்கல் தொகுப்பில் கரும்பு, வெல்லம், பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், உட்பட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசல் இன்றியும், சமூக இடைவெளியுடன் மக்கள் முககவசம் அணிந்தும், வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் அயன் சிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்து கிருஷ்ணன், துணை தலைவர் சுடலை அரசன், திமுக செயலாளர் பூதப்பாண்டியன், மீனாட்சிபுரம் கிளை செயலாளர் கன்னிசாமி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology