வி.கே.புரம் நகராட்சி -கொரோனா தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்

வி.கே.புரம் நகராட்சி -கொரோனா தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
X
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவின்படி அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமையில் நகராட்சி ஆணையர் காஞ்சனா, சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல் படுத்தி உள்ள நிலையில் இன்று விக்கிரமசிங்கபுரத்தில் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்கள் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி இம்முகாமில் முதல் கட்டமாக 230 நபர்களுக்கு போடப்பட்டன.

இதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன்.செவிலியர்கள் செல்வராணி, பிரேமா, சிவகாமி, தாயம்மாள், ராஜேஸ்வரி மற்றும் விகேபுரம் நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story