சுப்பிரமணியபுரத்தில் பாஜக, இந்து முன்னணியினர் குழிக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் காேவில் நிலத்திற்கு கொரோனா கால குத்தகையை செலுத்த கட்டாயப்படுத்தியதாக விவசாயிகள் குழியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நெல்லை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி இயக்கம் சார்பில் விவசாயிகள் குழிக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம்.
திருச்செந்தூர் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட விவசாய நிலங்களை சேரன்மகாதேவி வட்டத்திற்கு உட்பட்ட சுப்ரமணியபுரம், கோபாலசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பாட்டத்திற்கு எடுத்து பயிர் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாய சாகுபடி மூலம் போதிய விளைச்சல் இல்லாத காலத்தில் மற்றும் கொரோனா காலத்தில் ஒரு சில விவசாயிகள் குத்தகை பாக்கி வைத்துள்ளனர். ஆனால் முந்தைய நெல் பாக்கி முழுவதையும் அளந்து முடிக்குமாறு திருச்செந்தூர் தேவஸ்தான நிர்வாக அலுவலர்கள் கூறி வருகின்றனர்.
இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், விவசாயிகள் கூறுவதாவது:-
தற்போது பயிர் சாகுபடி செய்த குத்தகை அளிந்திட விவசாயிகள் தயாராக உள்ளோம். ஆனால் திருச்செந்தூர் தேவஸ்தான நிர்வாகம் பழைய குத்து பாக்கியை முடித்தால் தான் தற்போது உள்ள விளைச்சலை அளக்க முடியும் என்று கூறிய காரணத்தினால் தற்போது மழைக்காலம் என்பதால் நெற்பயிர் வீணாகி விடும் அபாயம் உள்ளது. எனவே சுப்ரமணியபுரம், கோபாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விவசாய பண்ணை அருகில் குழிதோண்டி அதில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக மேலச்செவல் வருவாய்த்துறை அதிகாரி சங்கர் மகாலிங்கம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அரசு அதிகாரி நம்பிக்கை அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையில், பத்தமடை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், கோபாலசமுத்திரம் நகர செயலாளர் மாரியப்பன், நகர துணைத்தலைவர் கொம்பையா, பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர், ராஜவேலு ஒன்றிய விவசாய அணி தலைவர் கந்தசாமி, மற்றும் முத்துராமன், ஆறுமுகம், தங்கவேலு, சுடலைமுத்து, சின்னத்தாய், பிச்சம்மாள், ஜானகி மற்றும் இந்து முன்னணி இயக்கம், பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu