மன்னார்கோவிலில் குழந்தைகள் தினத்தையாெட்டி எம்எல்ஏவுடன் ஒரு நாள் கலந்துரையாடல்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் வெயிலான் தெரு பகுதியில் எம்.எல்.ஏ வுடன் ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் வெயிலான் தெரு பகுதியில் எம்.எல்.ஏ வுடன் ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் மன்னார்கோவில் பகுதியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அப்பகுதியில் நடைபெற்ற எம்.எல்.ஏ உடன் ஒருநாள் குழந்தைகள் எனும் நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் குழந்தைகள் எம்.எல்.ஏ உடன் கலந்துரையாடல் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, விக்கிரம சிங்கபுரம் கண்ணன், மணிமுத்தாறு ராமையா, சிவன் பாபு, மாவட்ட பிரதிநிதி சண்முககுட்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஒன்றிய பிரதிநிதி மாரியப்பன் ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu