களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
X

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளது. இதில் திமுக நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களை கைப்பற்றி உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றியது..

2வது வார்டில் சார்ஜ் கோசல், 3வது வார்டில் விசுவாசம், 7வது வார்டில் இந்திரா, 8வது வார்டில் விஜயலட்சுமி, ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்கள் 4வது வார்டு தமிழ்ச்செல்வன், 5வது வார்டு சங்கீதா 6வது வார்டு தளவாய் பாண்டியன் ஒன்பதாவது வார்டு சத்திய சங்கீதாஆகிய ஒன்றிய கவுன்சிலர்கள்.

இரண்டாவது வார்டில் திமுக கூட்டணியில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் வனிதா ஆகிய 9 ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!