சேரன்மகாதேவி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது. திருநெல்வேலி மாவட்டம் சேரன மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளது.

இதில் திமுக மூன்று இடங்களை கைப்பற்றியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.வெற்றிப் பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று ஊராட்சி ஒன்றியத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

1வது வார்டில் ஆனந்த லட்சுமி, 3வது வார்டில் பூங்கோதை, 5 வது வார்டில் கனகமணி கஸ்தூரிபாய் ஆகிய மூன்று திமுக கவுன்சிலர்களும், 2 வது வார்டில் ராகவன் அதிமுக சார்பில் வெற்றிப் பெற்ற ஒன்றிய கவுன்சிலரும், 4வது வார்டில் காஞ்சிரஸ் சார்பில் வெற்றிப் பெற்ற கவன்சிலர் ராணியும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வட்டார தேர்தல் அதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்றுக் கொண்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags

Next Story