தமிழக ரவுடிகளின் என்கவுண்டர் லிஸ்ட் வெளியிட்ட திருச்சி சாமியார், அதிர்ச்சியில் போலீஸ்

தமிழக ரவுடிகளின் என்கவுண்டர் லிஸ்ட் வெளியிட்ட திருச்சி சாமியார், அதிர்ச்சியில் போலீஸ்
X

தமிழக ரவுடிகளின் என்கவுண்டர் லிஸ்ட் கொடுத்து போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த திருச்சி தேஜஸ் சாமியார்.

தமிழகத்தில் எத்தனை ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் செய்ய உள்ளனர் என்கிற லிஸ்டை திருச்சி சாமியார் செல்போனில் பேசி வசமாக போலீசில் சிக்கினார்.

திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள் (31).

காளியம்மன் வைத்து பூஜை செய்வது, குறிச்சொல்வது, பில்லி சூனியம் போன்ற மாந்திரீக வேலைகளை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 4 வருடகாலமாக அதே பகுதியில் வசிக்கும் சாமியார் பாலசுப்பிரமணியன், வக்கீல் ஒருவருடன் பேசும் ஆடியோ திருச்சியில் வைரலாகி வருகிறது.

அதில் சாமியார் தனக்கு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் தமிழகத்தில் 42 ரவுடிகள் அதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரவுடிகள் என்கவுண்டர் லிஸ்ட்டில் இருப்பதாக கூறுகிறார்.

திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் தன்னை வந்து பார்த்தாகவும் கூறும் பாலசுப்பிரமணியன் உங்களுக்கு வேண்டிய ரவுடியை பார்த்து இருக்க சொல்லுமாறும் அட்வைஸ்வும் கூறுகிறார்.

மேலும் மற்றொரு ஆடியோவில் சைரன் வைத்த காரில் அமைச்சர் சேகர்பாபுவை போய் சந்தித்தாகவும் கூறுகிறார். இந்த ஆடியோ வைரலாகி திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து,

தற்போது போலீசார் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சாமியாரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!