முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்; காவல்துறை எச்சரிக்கை

முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்; காவல்துறை எச்சரிக்கை
X

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண்.

முகக் கவசம் அணியத் தவறினால் தயங்காமல் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகரில் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பு முகாம்களை அமைத்து அரசு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் வரும் பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை கொடுத்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் முகக் கவசம் அணியாமல் வந்த 700க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ஒரேநாளை அபராதங்கள் வசூலிக்கப்பட்டன.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்றும், முகக்கவசம் அணியத் தவறினால் காவல்துறையினர் தயங்காமல் 500 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்றும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!