திருச்சி அரசு மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அமைச்சர்கள் வழங்கினர்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த நிதியில் வாங்கப்பட்ட 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.என். நேரு. பேசியதாவது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெற்றுவந்தார்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கும் 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளையும், தஞ்சாவூருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பாளராக இருப்பதால் அந்த மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டி களை வழங்கியுள்ளார்.
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 1099 படுக்கைகள் உள்ளது. அதில் 175 படுக்கை காலியாக உள்ளது. ஆக்சிசன் படுக்கை 743 அதில் 30 காலியாக உள்ளது.
356 ஆக்சிசன் இல்லாத படுக்கை அதில் 175 காலியாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 200 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைய ஆரம்பித்துள்ளது 1600 1700 எண்ணிக்கையில் வந்த நிலை மாறி தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக கூறினார்.
தற்போது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது காய்கறி வாகனங்கள் தொடர்ந்து ஊரடங்கு முடியும்வரை விற்பனையை செய்யும். ஊரடங்கு முடிந்த மறுநாள் முதல் அவர்கள் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு செல்லலாம் என்று கூறினார்.
சென்னையில் கோயம்பேடு செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது .இருப்பினும் இங்கு காந்தி மார்க்கெட் செயல்படுவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு அதை செய்யலாம் என்று கூறினார்.
மார்க்கெட் திறந்தாள் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடுவதால் நோய் தொற்ற ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பொது மக்களிடம் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறினால் பொதுமக்கள் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை இன்னும் சற்று கூடுதலாக அவர்கள் மீது வழக்கும் அல்லது அபராதமோ அல்லது வாகனங்களை பறிமுதல் செய்தால் அதற்கும் பொதுமக்கள் அதிகாரிகளை தொடர்ந்து வசை பாடுகிறார்கள் என்னதான் செய்வது.
திருச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்திற்கு கால்வாய்கள் சீரமைக்க 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள கால்வாய் சீரமைக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் உய்யக்கொண்டான் கால்வாய் துர்ர்வாரும் பணிகள் துவங்க உள்ளது.
கோ பேக் ஸ்டாலின் என்பதைவிட ஸ்டாண்டு வித் ஸ்டாலின் என்ற ஆஷ்டேக் தான் நம்பர் 1 இல் உள்ளது. அதிமுகவினருக்கு எப்போதும் திமுகவை திட்டுவது மட்டும்தான் தெரியும் அவர்கள் என்ன பாராட்டு மழையை பொழிந்து விடப் போகிறார்கள் என்று கிண்டலாக பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா,மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, துறையூர் ஸ்டாலின் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu