திருச்சியில் 1 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை

திருச்சியில் 1 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை
X

திருச்சி உறையூரில் உலக சாதனைக்காக  சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகள்

திருச்சி உறையூரில் உலக சாதனைக்காக மாணவ மாணவிகள் 1 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றினர்

திருச்சி உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனைக்கான சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. செங்களத்தான் குழந்தை அம்மன் சிலம்பம் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்.

இதில் ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான மாணவ மாணவிகள் நூற்று பன்னிரெண்டு பேர் கலந்து கொண்டனர். சிலம்பத்தில் உள்ள சுற்று முறைகளின்படி ஒரு மணி நேரம் இடைவிடாது கம்பு சுற்றினார்கள். உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story