மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் திருச்சி கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் திருச்சி கலெக்டர் ஆய்வு
X

திருச்சி மாவட்டத்தில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் திருச்சி கலெக்டர் சிவராசு திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, மணப்பாறை, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இவற்றை வைப்பதற்கென்றே தனியாக கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு அந்த கிட்டங்கிற்கு சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா? பதிவறையில் உள்ள ஆவணங்கள் சரியாக பராமரிக்கப் பட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி உடனிருந்தார்.

Tags

Next Story
ai in future agriculture