உ.பி. சம்பவத்தை கண்டித்து திருச்சி விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம்

உ.பி. சம்பவத்தை கண்டித்து திருச்சி விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம்
X

உ.பி.யில் நடந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

உ.பி.யில் நடந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தூண்டுதலின் பேரில் அவர் மகன் கூட்டத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றியதில் 8 விவசாயிகள் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். அவரையும், அவரின் மகன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மனித மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம், மாநில செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!