திருச்சி மாநகராட்சி சார்பில் 2-ம் தேதி பெண்களுக்கான சைக்கிள் பேரணி

திருச்சி மாநகராட்சி சார்பில் 2-ம் தேதி பெண்களுக்கான சைக்கிள் பேரணி
X
75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி திருச்சி மாநகராட்சி சார்பில் 2-ம் தேதி பெண்களுக்கான சைக்கிள் பேரணி நடக்கிறது.

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் இணைப்பு சாலை உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள (மேற்கு பகுதி) சாலையில் யோகாசனம் பயிற்சி நிகழ்ச்சி 02.10.2021ம் தேதி சனிக்கிழமையன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை மகளிர்களுக்கான சைக்கிள் பேரணி நிகழ்ச்சி அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூர் அறிவியல் பூங்கா வரை நடைபெறவுள்ளது.

மேலும் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மகளிர்களுக்கான சைக்கிள் பேரணி நிகழ்ச்சி அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென் னூர் அறிவியல்பூங்கா வரை நடைபெறவுள்ளது.

எனவே மேற்படி தேதியன்று நடைபெறவுள்ள யோகா பயிற்சி நிகழ்ச்சி மற்றும் மகளிர்களுக்கான சைக்கிள் பேரணி நிகழ்ச்சிகள் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் மக்கள், மகளிர்கள் சைக்கிளுடன் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture