பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்பனை : திருச்சி மது பிரியர்கள் மகிழ்ச்சி
திருச்சியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் மது பானம் வாங்க சமூக இடைவெளியோடு வரிசையில் நிற்கும் மதுபிரியர்கள்.
தமிழகத்தில் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக வீடு கட்டும் பொருள்களின் விலை அதிகரித்தது.
இதற்கு மத்தியில் மதுபானங்களும் கூடும் என மதுபிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்று வழக்கம்போல பழைய விலையிலேயே மீண்டும் விற்பனை தொடங்கியதால் அதிகமான மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அமர்ந்துள்ள வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபான விற்பனைக் கடையில் பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்கப்படுவதால் மது பிரியர்கள் உற்சாகமாய் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும் கடைக்கு வருபவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றவும் முகக் கவசங்கள் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu