திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் தொடங்கினார்

திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் தொடங்கினார்
X

திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஊரடங்கில் ஆதவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையோர மக்களுக்கான உணவு வழங்கும் சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி பீமநகர் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் இந்த முழு ஊரடங்கு காலத்தில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் சேவையை கடந்த முதல் அலையின் போதும் செய்து வந்தனர். தற்போது இந்த இரண்டாவது அலையில் தங்களுடைய சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆதவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே என் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு பொட்டலங்கள் வழங்கும் வாகனங்களை தொடங்கி வைத்தனர்.

இன்று முதல் ஊரடங்கு காலம் முடியும் வரை தொடர்ந்து சாலையோர மக்களுக்கான உணவு பொட்டலங்களை யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி,மாநகரச் செயலாளர் அன்பழகன்.யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் ரபீக், மாவட்ட தலைவர் சாதிக், மாவட்ட செயலாளர் ஷேக் மைதீன் ,குண்டு பிலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!