திருச்சி முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்,.நேரு, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்,.நேரு, மெய்யநாதன்  மாலை அணிவித்து மரியாதை
X

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346 வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணவித்து மரியாதை செய்தனர்.

திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ai marketing future