திருச்சி- மன்னர் பெரும்பிடுகு சிலை அருகில் முத்தரையர் சஙு்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி- மன்னர் பெரும்பிடுகு சிலை அருகில் முத்தரையர் சஙு்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அருகில் வீர முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் பாலம் கட்டுவதற்காக மன்னர் பெரும்பிடுகு சிலையை அகற்றக்கூடாது என முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சி கண்டோன்மணெ்ட் ஒத்தக்கடை பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. இந்லையில் திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் எம்.ஜி ஆர் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட பாலம் அமைத்தால் மன்னர் முத்தரையர் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க கூடாது என்பதை வலியுறுத்தி வீர முத்தரையர் சங்கம் சார்பில் இன்று நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மன்னர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தங்களது அடையாளத்தை அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசு இதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல் உள்ளிட்ட ஏரானமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!