திருச்சியில் கருணாநிதி பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, அமைச்சர் துவங்கிவைத்தார்

திருச்சியில் கருணாநிதி பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, அமைச்சர் துவங்கிவைத்தார்
X
திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி நடந்த  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

திருச்சியில் முன்னாள் கருணாநிதி 98வது பிறந்தநாளை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கலைஞர் அறிவாலயம், கரூர் புறவழி சாலை, சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக நிழல் மற்றும் ஆக்சிஜன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று துவங்கி வைத்தார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு.

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை தனியார் மருத்துவமனையில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதுகுறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றார்.

மேலும் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டதில் திருச்சி முதன்மை மாவட்டமாக விளங்குகின்றது என்றும், தமிழ்க முதல்வர் தடுப்பூசிகளை வரவழைத்து உள்ளார். இனி தட்டுபாடுகள் இல்லாத நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி, மாவட்ட வனத்துறை அலுவலர் சுஜாதா,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்