திருச்சியில் மண்டை ஓட்டுடன் விவசாயிகள் திடீர் சாலைமறியல் போராட்டம்

திருச்சியில் மண்டை ஓட்டுடன் விவசாயிகள் திடீர் சாலைமறியல் போராட்டம்
X

திருச்சியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடந்த விவசாயிகள்  சாலை மறியல் போராட்டத்தில் போலீசார், விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருச்சியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் மண்டை ஓட்டுடன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப். ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து தமிழகத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் மண்டை ஓட்டுடன் அரை நிர்வாணமாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்கள் அடங்கிய கோப்புகளை கிழிக்க முயற்சித்த போது காவல்துறையினர் அவற்றை பறிக்க முயற்சித்தனர் இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதனை தொடர்ந்து காவல்துறையினர் சமாதான பேச்சில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!