திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்- கலெக்டர் வெளியிட்டார்

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்- கலெக்டர் வெளியிட்டார்
X

திருச்சி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சிவராசு வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் சிவராசு வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று வெளியிட்டார்.

1,500 வாக்காளர்களை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் தொடர்பாக பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மற்றும் இடமாற்றம் தொடர்பாக முறையீடுகள் ஏதும் இருப்பின் இது தொடர்பான முறையீடுகளை 25- 9 -2021 -க்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 258 ,திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 271, மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 324, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி 339, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 294, லால்குடி சட்டமன்ற தொகுதியில் 249 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 263, முசிறி சட்டமன்ற தொகுதியில் 255, துறையூர் சட்டமன்ற தொகுதியில் 268 என மாவட்டம் முழுவதும் உள்ள 9 தொகுதிகளிலும் 2,531 வரைவு வாக்கு சாவடிகள் அமைய உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் இந்த பட்டியலை வெளியிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் ஷேக் முஜிபுர் ரகுமான், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!