திருச்சி மாவட்டத்தில் இலக்கை தாண்டி கொரோனா தடுப்பூசி
தமிழகமெங்கும் கொரோனோ நோயை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனோ தடுப்பூசி மெகா முகாமின் பொருட்டு ஊரக பகுதிகளில் சுமார் 353 முகாம்களும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 162 முகாம்களுமாக மொத்தம் 515 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது மேலும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இம்முகாம்களில் மாவட்டம் முழுவதும் 106156 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது . இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக்கொண்ட 56692 பயனாளிகளும் இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட 43669 பயனாளிகளும் மற்றும் கோவாக்ஸின் முதல் தவணை செலுத்திக்கொண்ட 2890 பயனாளிகளும் இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட 2905 பயனாளிகளும் அடங்குவர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா நோயின் தொற்று பற்றிய விழிப்புணர்வும், கொரோனா தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதாரத் துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை தாண்டி அதிக அளவு பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சிறப்பான நிலையினை எட்டியதற்கு சுகாதார துறையினர் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து துறை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சிவராசு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu