கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி
X
கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக திருச்சி மாறி வருவது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்று திருச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. நேற்று 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. அதற்கு முந்தைய நாளான 25-ம் தேதி 54 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிர்பலி எதுவும் இல்லை.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று உயிர்பலி எதுவும் இல்லை என்ற தகவல் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரே நாளில் 3 பேர் பலியாகி இருந்தது அன்றைய தினம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ,தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு காரணமாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறுமா? என்ற ஒருவித எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!