திருச்சி கலெக்டர்., எஸ்.பி அதிரடியாக இடமாற்றம்

திருச்சி கலெக்டர்., எஸ்.பி அதிரடியாக இடமாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார். இவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜன் தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றி வந்த மயில்வாகனன் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் சப் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story