கருப்பு பூஞ்சை நோய்க்கு உடனடி அறுவை சிகிச்சை அவசியம் : டாக்டர் ஜானகிராமன்
திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கருப்பு பூஞ்சை குறித்து டாக்டர் ஜானகிராமன் விளக்கினார்.
திருச்சி தில்லைநகர் 3வது குறுக்குத் தெருவில் உள்ள ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மேலாண்மை இயக்குனரும், ஸ்கல் பேஸ் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜானகிராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
கொரோனா பாதித்த நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நோய் ஒரு வகை உயிர்க்கொல்லி நோயாகும். இந்த நோய் வந்தால் முதலில் மூக்குதான் பாதிக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் இருந்து கருப்பு நிற அழுக்கு வெளிப்படுதல், கண்களுக்கு கீழ் மரத்துப்போதல், தலைவலி, கண் வீக்கம், இமை மூடல், கண் நகர்த்த முடியாமல் போகுதல், சைனஸ் பிரச்சனை, கண்பார்வை மங்குதல், பல்வலி, பல் ஆடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இவை தெரிந்தவுடன் உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை ஆலோசிக்க வேண்டும். தாமதப்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நோய் அதிகமானால் மூளையை பாதிக்கும்.
கொரோனா நோயால் பாதித்தவர்கள் அதிக அளவில் வெண்டிலேட்டரில் இருந்திருப்பார்கள். இந்த நாள் சர்க்கரை நோய் அதிகரித்து கருப்பு பூஞ்சை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் சர்க்கரை நோய் அதிகம் இருந்தால் கொரோனா வந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் கருப்பு பூஞ்சை நோய் உருவாகிறது.
அடுத்ததாக முக கவசம் அணிவதில் மிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் முக கவசத்தை கழுவி அணியவேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் முக கவசத்தையே பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும். கருப்பு பூஞ்சை நோய் வந்தவர்களுக்கு உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின்னர் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை கடம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu