திருச்சியில் கருப்பு பூஞ்சை நோயால் 6 பேர் பாதிப்பு கலெக்டர் சிவராசு தகவல்

திருச்சியில் கருப்பு பூஞ்சை நோயால் 6 பேர் பாதிப்பு கலெக்டர் சிவராசு தகவல்
X

திருச்சி கலெக்டர் சிவராசு  (கோப்பு படம்)

திருச்சியல் கருப்பு பூஞ்சை நோயால் 6 பேர் பாதி்க்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஏழு நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.அதனை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் அவதி பட கூடாது என்ற நோக்கத்திற்காக,திருச்சி மாவட்டத்தில் இன்று மாலை புறநகர் பகுதிகளுக்குச் செல்ல 18 பேருந்துகளும், திருச்சி மாநகருக்குள் 16 பேருந்துகளும் தற்போது இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறந்து இருக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய கடைகள் வழக்கம் போல் திறக்கக் கூடாது, அதே நேரத்தில் கடைகளில் உள்ள பொருட்களை எடுக்கவும் சுத்தம் செய்யவும் அனுமதிக்கப்படும். வரும் திங்கட்கிழமை காலை 6- மணி முதல் கடுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை பாதிப்பால் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும், வைரஸ் தொற்று காலத்தில் கருப்பு பூஞ்சை நோயும் ஆபத்தான நோயாக அரசு அறிவித்துள்ளதால் பொது மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.

உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று பரவும் நோயாக உள்ளது எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், காந்தி மார்க்கெட் தற்போது மூடப்பட்டு உள்ளதால் தற்காலிகமாக வேறு இடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிகமாக இயங்கி வரும் இடம் பற்றாக்குறையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்கப்படும்.

முழு ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியே வரக்கூடாது. மளிகை காய்கறி கடைகள் திறந்திருக்காது.தோட்டக்கலைத்துறை சார்பில் அந்தந்த பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்திற்கு அரசு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் வந்து விடும்.

இந்த நோய்க்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளிக்க மருந்துகள் உள்ளது எனவும், திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 2000 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், தற்போது தயாராக ஆயிரம் படுக்கை வசதிகள் காலியாக உள்ளது. அதேபோல 100 ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கை வசதி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future