திருச்சி பாலக்கரை ஆழ்வார் தோப்பு பகுதியில் 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கொள்ளை

திருச்சி பாலக்கரை ஆழ்வார் தோப்பு பகுதியில் 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கொள்ளை
X

திருச்சி ஆழ்வார் தோப்பில் கொள்ளை நடந்த பகுதியில் மோப்பநாயுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் 10 லட்சம் மதிப்பிலான வெளிட்டு பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது. கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நஜிமா பேகம் வயது 75 இவரது கணவர் அப்துல்மாலிக் நேவி ஆபீஸராக பணிபுரிந்து இறந்துவிட்டார்.

இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

ஒரு மகன் கல்கத்தாவில் ஆர்மி ஆபிஸராக பணிபுரிந்து வருகிறார். நஜிமா மட்டும் தனியாக பாலக்கரை ஆழ்வார் தோப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக ராமலிங்க நகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற நசீமா பேகம் அங்கு தங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் நசீமா பேகத்திற்கு போன் மூலம் உங்கள் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதாக அருகே குடியிருப்பவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நசீமா பேகம் மற்றும் அவரது மகள் ஆழ்வார்தோப்பு பகுதி உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருடு போனது தெரிய வந்தது.

உடனடியாக தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஏசி சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்

திருடன் மோப்ப நாய் மூலம் கண்டு பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்றான்.

மேலும் காவல் துறையை சேர்ந்த மோப்ப நாய் பொன்னி வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்து பழைய மதுரை ரோடு வரை சென்று திரும்பியது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!