திருச்சியில் 3 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்
திருச்சி பாலக்கரையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம் செய்தது-
பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஆர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை வகித்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது முன்னிலை வகித்தார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காஜா முஹையத்தீன், தமிழ் மாநில பொது செயலாளர் ஜாவித் உசேன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொன்டு கண்டன உரையாற்றினார்.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் சாதிக் பாட்சா பாவா, தமிழக முதல்வரிடம் கேட்டு கொண்டது போல் இனி வரும் காலங்களில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளிலே ஜாதி, மத பேதமின்றி அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய பொது செயலாளர் முகமது மீரான், தமிழ் மாநில செய்தி தொடர்பாளர் தீபக் , திருச்சி மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் , திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் சமீர் பாட்சா, திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் ஆமீனா ராஷீதா மற்றும் திருச்சி மாவாட்ட வட்ட நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu