குப்பை அருகில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

குப்பை அருகில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
X

திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் குப்பைஅருகே நின்ற லாரி தீ பிடித்து எரிந்து நாசமானது.

திருச்சியில் குப்பை அருகில் நின்ற லாரி தீப் பிடித்து எரிந்து நாசமானது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பிரதான சாலையில் அருகே சாலையோரமாக குப்பைகள் கொட்டி கிடந்துள்ளது‌. இதன் அருகில் ஈச்சர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

இந்தநிலையில் எதிர்பாராத விதமாக குப்பையில் தீப்பற்றி உள்ளது. அந்த தீயானது மளமளவென பரவி அருகிலிருந்த லாரியின் முன்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

நின்றுகொண்டிருந்தலாரியில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!